கோடைக்காலம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதே சமயம் இரவு வேளையில் குளிரும், குறிப்பாக அதிகாலையின் பின் பனியும் அதிகமாகவுள்ளது. கடந்த மார்கழியில் இருந்து தற்போது வரை வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருந்ததால், கோடையின் தாக்கமும் மிக அதிகமாக இருக்குமென வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில் வெயில் காலங்களில் வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனமானது தெரிவித்திருக்கிறது. இதனிடையே டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் வெடித்து விடும் என பரவும் செய்தியில் உண்மை இல்லை என்றும் இந்திய ஆயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஆகவே இது போன்ற தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.