பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நவோமி ஒசாகாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பிறகு, உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆர்யனா சபலென்கா செய்த ‘மூன்வாக்’ நடனம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. போட்டிக்கு பிந்தைய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அரங்கில் இருந்த ரசிகர்களை தன்னுடன் இணைந்து நடனமாட அழைத்த சபலென்கா, மைதானத்தையே ஒரு இசை நிகழ்ச்சியாக மாற்றினார்.
மேலும் மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற அந்த நடன அசைவை அவர் மிக நேர்த்தியாக செய்து காட்டியது, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது. இந்த நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
From dancing in front of the admin’s phone to dancing on Philippe-Chatrier 💃#RolandGarros pic.twitter.com/XqxPmCjt35
— Roland-Garros (@rolandgarros) June 1, 2026
“>
ஏற்கனவே இந்தத் தொடர் முழுவதும் தனது வெற்றிக்குப் பிறகு மைதானத்தின் படிக்கட்டுகளில் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்து வரும் சபலென்கா, இந்த முறை ஒசாகா உடனான வெற்றிக்குப்பிறகு செய்த இந்த ‘மூன்வாக்’ சாகசம், அவரது கிராண்ட் ஸ்லாம் கனவுப் பயணத்தில் ஒரு மறக்க முடியாத தருணமாக மாறியுள்ளது.
