ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி அசத்திய 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுப்பார் என்று ஐபிஎல் நிறுவனரும் முன்னாள் தலைவருமான லலித் மோடி கணித்துள்ளார்.
இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்து ‘ஆரஞ்சு தொப்பி’ மற்றும் ‘மோஸ்ட் வேல்யூபில் பிளேயர்’ விருதுகளை வென்றுள்ள வைபவ், தனது துணிச்சலான ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷியின் திறமையைக் கண்டு வியந்துள்ள லலித் மோடி, “எந்தவொரு ஹாலிவுட் அல்லது பாலிவுட் நட்சத்திரத்தை விடவும் நீ பெரிய சூப்பர் ஸ்டாராக மாறுவாய்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்நிலையில் பணத்திற்கு மயங்காமல் தனது இலக்கையும் விளையாட்டையும் மட்டும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால், அவர் உலகத்தரம் வாய்ந்த வீரராக உயர்வார் என்றும், எதிர்காலத்தில் டி20 போட்டிகளில் இரட்டைச் சதம் அடிக்கும் திறமை அவரிடம் இருப்பதாகவும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
