அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளிவிட்டது. இந்த நிலையில் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று வெளியிட்டார். அதில், ஒரே ஒரு பெண் வேட்பாளருக்கு இடம் கிடைத்துள்ளது. அதாவது  திமுகவில் இருந்து விலகி சமீபத்தில் அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழனை, திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. சிம்லா முத்துச்சோழன் 2016 தேர்தலில் ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.