பிரபல தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது சாம்சங்  Neo QLED, OLED மற்றும் 4K UHD  டிவி மாடல்களை வாங்குபவர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது .ஜனவரி 31ஆம் தேதி வரை த ஃபியூச்சர் பெஸ்ட் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு விற்பனையில் இந்த சலுகைகள் அடங்கும்.

இதில் Cinematic Audio Visual, Neural AI Quantum Processor மற்றும் AI Upscalingபோன்ற சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் படத்தின் தரத்தை 4k, 8k பட வெளியீட்டிற்கு மேம்படுத்த முடியும். பெரிய திரை கொண்ட டிவி-க்களை வாங்கும் போது 1 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போன், 69 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள QLED 4K டிவி மற்றும் 37 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட Wireless Sound Bar உள்ளிட்ட நிச்சய பரிசுகள் அறிவிக்கப்ட்டுள்ளன.