அமேசான் கிரேட் ரிபப்ளிக் சேல் ஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் போன்ற மின் சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் வரிசையில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா மாடல் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .

இது அந்த மொபைலில் உண்மையான விலையை விட 35 ஆயிரம் ரூபாய் குறைவு ஆகும். ஹச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு இந்த சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் வட்டி இல்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா மாடல் பேண்டம் பிளாக், கிரீன், கிரீம் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.