பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, டிவி விவாதத்தில் பைஜாமா அணியாமல் தோன்றியதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூஸ் 18 சேனலில் அமிஷ் தேவ்கன் தொகுத்து வழங்கிய ஆர் பார் நிகழ்ச்சியில், செப்டம்பர் 12ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்தது. நிகழ்ச்சி தொடங்கியபோது, கௌரவ் பாட்டியா இளஞ்சிவப்பு நிற குர்தா அணிந்திருந்தார், ஆனால் கீழ் ஆடை அணியாமல் தோன்றியதாக வீடியோவில் தெரிந்தது. அவர் தனது குர்தாவை அடிக்கடி சரிசெய்து கால்களை மறைக்க முயன்றாலும், அந்த காட்சி கேமராவில் பதிவாகி, பின்னர் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக, சமாஜ்வாடி கட்சியின் ஐடி பிரிவு, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, “பாஜகவின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது” என்று விமர்சித்தது.
बिना पायजामा के टीवी चैनल डिबेट में बैठे भाजपा के नंगे पुंगे अश्लील किस्म के टोंटी प्रेमी @gauravbhatiabjp को देखिए।
इसे शर्म नहीं? या ये किसी भाजपाई या पड़ोसी के टोंटी से पानी ले रहा था? इस गौरव भाटिया का जो दृश्य आप सबको दिखाई दे रहा है ये ही असली भाजपाई चरित्र है।
ये बेशर्म… pic.twitter.com/rMGVDNzXn4
— Samajwadi Party Media Cell (@mediacellsp) September 12, 2025
“>
இணையத்தில் பலரும் அவரை கேலி செய்து, தேசிய தொலைக்காட்சி விவாதத்தில் அரை நிர்வாணமாக தோன்றியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கூடுதலாக, ஒரு பெண் வழக்கறிஞர், “கௌரவ் பாட்டியாவுக்கு எதிராக பொது அநாகரீகத்திற்காக வழக்கு பதிவு செய்ய வேண்டும். இது ஆபாசத்தின் உச்சம்” என்று கடுமையாகக் கூறியுள்ளார்.
Gaurav Bhatia went from shameless and spineless to pant-less ? pic.twitter.com/aXTLxkvQMn
— Ranting gola (@therantinggola) September 12, 2025
“>
இந்நிலையில், கௌரவ் பாட்டியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. முழு நிகழ்ச்சி அவர்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இன்னும் கிடைக்கிறது, மேலும் அந்த சர்ச்சைக்குரிய காட்சியை 6.20 நிமிடங்களில் காண முடிகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, கௌரவ் பாட்டியா சமூக ஊடகங்களில் பரவலாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். எனினும், பாஜக தரப்பில் இதுகுறித்து இதுவரை எந்தவிதமான விளக்கமும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
