ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், இரண்டு குழந்தைகளுக்கு தாயான அனு மீனா என்ற பெண் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இவருடைய கணவர் கௌதம் மீனா, பொதுப்பணித்துறையில் (PWD) உயர் பதவியில் இருக்கும் ஒரு எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியர் ஆவார். ஆரம்பத்தில் இது தற்கொலை என்று வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், தற்போது கிடைத்துள்ள டிஜிட்டல் ஆதாரங்களும், இவர்களது 10 வயது மகன் மாஹிர் மற்றும் 8 வயது மகள் செமைரா கொடுத்த வாக்குமூலங்களும் ஒட்டுமொத்த சமூக வலைதளங்களையுமே அதிர வைத்துள்ளன.
அனு மீனாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, 2015-ல் திருமணம் நடந்தது முதலே கௌதம் மீனா தனது மனைவிக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளை கொடுத்து வந்துள்ளார். குறிப்பாக மது குடித்துவிட்டு வந்து, டிவியை பயங்கர சத்தமாக ஓடவிட்டு, குழந்தைக்கு முன்னாலேயே மனைவியை கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார். “அப்பா அடிக்கும்போதெல்லாம் அம்மாவுக்கு பிபி குறைஞ்சிடும், அப்போ அம்மா என்கிட்ட உப்புத்தண்ணி கலந்து எடுத்துட்டு வரச் சொல்லுவாங்க” என 10 வயது மகன் கதறியது நெட்டிசன்களின் நெஞ்சை உலுக்கியுள்ளது.
जयपुर की अनु मीणा ने फांसी लगा ली.
इस वीडियो में अनु के इंजीनियर पति गौतम ने उसे जूते से मारा, धक्का देकर नीचे गिरा दिया. फिर अनु के चेहरे पर थूक रहा है.
ये सब अनु के बेटे के सामने हो रहा है.
अनु की गौतम से शादी साल 2015 में हुई थी. गौतम PWD में इंजीनियर है. शुरुआत के… pic.twitter.com/1lX4o4iaFD
— Ranvijay Singh (@ranvijaylive) May 24, 2026
“அரசு வேலை, பெரிய பதவி என்று பார்த்துcharacter-ஐ செக் பண்ணாமல் திருமணம் செய்து வைத்தால் இப்படித்தான் நடக்கும்” என இணையவாசிகள் இந்த PWD அதிகாரியை உடனடியாக கைது செய்யக் கோரி ஜெய்ப்பூர் போலீசாரை டேக் செய்து தங்களது கடுமையான கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
