தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ ஆகியோருக்கு இடையே மேற்கு ஆசியப் போர் விவகாரத்தில் கடுமையான கருத்து மோதல்கள் வெடித்துள்ளன. ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் ஆக்ரோஷமான அணுகுமுறையையும், ஒரு நாகரிகத்தையே அழிப்போம் என்ற ட்ரம்பின் எச்சரிக்கையையும் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று போப் விமர்சித்தார்.

இதற்குப் பதிலடியாக, போப் ஒரு “லிபரல்” என்றும், குற்றங்களைத் தடுப்பதில் அவர் “மென்மையானவர்” என்றும் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். வரலாற்றில் முதன்முறையாக ஒரு அமெரிக்கர் போப் பதவியை அலங்கரிக்கும் நிலையில், ட்ரம்ப் தனது அரசியல் செல்வாக்கினால் தான் லியோ தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று உரிமை கொண்டாடுவது இந்த சர்ச்சையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இதனால் வரலாற்று ரீதியாகப் பார்த்தால், போப் பதவி என்பது வெறும் ஆன்மீகப் பணி மட்டுமல்ல; இடைக்காலத்தில் மன்னர்களை மகுடம் சூட்டும் அதிகாரம் முதல், தற்காலத்தில் உலகளாவிய அமைதி முயற்சிகள் வரை பெரும் அரசியல் செல்வாக்கைக் கொண்டதாக இது இருந்து வருகிறது. கி.பி. 800-ல் போப் லியோஅதிபர் சொன்ன அந்த ஒரு வார்த்தை, சார்லமேனைப் பேரரசராக அறிவித்த நிகழ்வு முதல், இன்றைய லியோ வரையிலான வரலாறு, மத அதிகாரத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் இடையே நிலவும் இடைவிடாத போராட்டத்தைப் பிரதிபலிக்கிறது.

இந்நிலையில் இன்றைய சூழலில், வாடிகனுக்கு என்று தனி ராணுவம் இல்லாவிட்டாலும், சுமார் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் தார்மீகக் குரலாக போப் விளங்குவதால், அவரது விமர்சனங்கள் உலக நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.