அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவ வீரர்கள் ரகசியமாக போர் முனைக்கு அனுப்பப்படுவது குறித்த தகவல் ஒரு வினோதமான முறையில் கசிந்துள்ளது. சான் டியாகோ ராணுவ முகாம்களுக்கு அருகில் உள்ள கேளிக்கை விடுதியில் பணிபுரியும் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த விடுதிக்கு வரும் இளம் ராணுவ வீரர்கள் தாங்கள் அடுத்த வாரம் போருக்காகப் புறப்பட உள்ளோம் என்றும், அதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறி தங்களது பணத்தை வாரி இறைப்பதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட வேண்டிய இந்தத் தகவல்கள், வீரர்கள் மூலமாகவே வெளியில் கசிந்தது ராணுவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான கூடுதல் வீரர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வரும் நிலையில், இந்த வீடியோ போருக்கான முன்னேற்பாடுகளை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.
View this post on Instagram
“>
ஏற்கனவே ஆயிரக்கணக்கான வீரர்கள் போர்க்கப்பல்கள் மூலம் அந்தப் பகுதிக்குச் சென்று சேர்ந்துள்ளனர். இருப்பினும், அமெரிக்க மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இந்தப் போரில் அமெரிக்கா ஈடுபடுவதை விரும்பவில்லை என்றும், உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
இளம் வீரர்களின் இந்த மனநிலை மற்றும் தகவல் கசிவு அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
