பெற்றோர்களே எச்சரிக்கை! டியூஷன் முடிந்து வீடு திரும்பிய இரு சிறுமிகளை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்த நிலையில், அங்கிருந்த ஒருவரின் துரித செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ள சம்பவம் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியிலேயே எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த நபர் சிறுமிகளைப் பின் தொடர்ந்ததும், அங்கிருந்த மற்றவர்கள் அதைக் கவனிக்கத் தவறியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நேரத்தில் ‘தேவதூதனாக’ வந்த ஒரு நபர், சூழலை உணர்ந்து உடனடியாகத் தலையிட்டு அந்த மர்ம நபரைத் தடுத்து நிறுத்தியதால் சிறுமிகள் பாதுகாக்கப்பட்டனர்.
🚨Shocking Footage: Two young girls were returning home from tuition when a suspicious man started following them.
People around did not seem to notice.
Within moments, a gentleman stepped in like a guardian angel and prevented what could have turned into something very… pic.twitter.com/4vfasR18Yn
— Aparajite (@amshilparaghu) April 10, 2026
“>
“எல்லா கதைகளும் இதுபோல மகிழ்ச்சியான முடிவைத் தருவதில்லை” என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், குழந்தைகளைத் தனியாக அனுப்ப வேண்டாம் என்றும், ஒருவேளை அனுப்ப நேரிட்டால் தகுந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
