ஹோட்டல் ஒன்றில் தம்பதி ஒருவர் சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பத் தயாராகின்றனர். அப்போது அவர்களுக்குப் பக்கத்து டேபிளில் சாப்பிட்டு முடித்துவிட்டுச் சென்றவர்கள், சர்வர் ஊழியருக்காக ஒரு தொகையை ‘டிப்ஸ்’ ஆக வைத்துவிட்டுச் செல்கின்றனர். இதனை கவனித்த அந்தப் பெண், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரும் கவனிக்காத நேரத்தில் நைசாக அந்தப் பணத்தை எடுத்து தனது பைக்குள் போட்டுக்கொண்டு ஒன்றுமே தெரியாதது போல் கிளம்பிச் செல்கிறார்.
A couple finishes their meal, the table next to them leaves a tip for the server… and instead of minding her business, she takes it and leaves like it was hers. pic.twitter.com/lIpaOaivmN
— Clown World ™ 🤡 (@ClownWorld) April 12, 2026
இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியாகி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “நல்ல உடை அணிந்து நாகரிகமாகத் தெரியும் ஒரு பெண், உழைக்கும் ஊழியரின் டிப்ஸ் பணத்தை இப்படித் திருடலாமா?” என்று நெட்டிசன்கள் அந்தப் பெண்ணை வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த வீடியோ Coexistence மற்றும் தனிமனித ஒழுக்கம் குறித்தப் பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது.
