ஐபிஎல் (IPL 2026) போட்டிகள் களைகட்டியுள்ள நிலையில், மைதானத்திற்குள் விற்கப்படும் உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளின் விலை குறித்துப் பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. பொதுவாக 50 ரூபாய்க்கு விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகள், மைதானத்திற்குள் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. இது தொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில், அசல் விலையான MRP-ஐ மறைப்பதற்காக அதன் மேல் அதிக விலை கொண்ட போலி ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது.
IPL stadiums are looting fans? Snacks (normally ₹50) sold for ₹100 with fake MRP stickers peeled off to hide the real price. pic.twitter.com/Kxn8NEfkZZ
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 12, 2026
ரசிகர்கள் அந்த ஸ்டிக்கரைப் பிச்சுக் காட்டியபோது, அடியில் உண்மையான விலை குறைவாக இருப்பது தெரிகிறது. லக்னோவின் ஏகானா மைதானம் உள்ளிட்ட சில இடங்களில் இது போன்ற விலை மோசடிகள் குறித்துப் புகார்கள் எழுந்துள்ளன. “டிக்கெட் விலையே அதிகம், இதில் ஸ்நாக்ஸிலும் இப்படி கைவரியைக் காட்டினால் ரசிகர்கள் எங்கே போவார்கள்?” என்று நெட்டிசன்கள் பிசிசிஐ (BCCI) மற்றும் மைதான நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
