பெங்களூரு மாநகரின் நெரிசல் மிகுந்த சாலையில், போக்குவரத்து விதிகளை மீறி ‘ராங் ரூட்டில்’ (Wrong Way) வந்த கார்களை, ஆக்டிவாவில் வந்த ஒரு நபர் ஒற்றை ஆளாக மறித்து நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மற்ற வாகன ஓட்டிகள் விதியை மீறுபவர்களுக்கு வழிவிட்டுச் சென்ற நிலையில், இந்த நபர் மட்டும் தனது ஸ்கூட்டரை நகர்த்தாமல், கார்களைப் பின்னோக்கிச் செல்லுமாறு பிடிவாதமாக நின்றார்.
MAN ON ACTIVA ALONE STOPS CARS COMING THE WRONG WAY IN BENGALURU💀 pic.twitter.com/3Xm3BJdeiK
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 12, 2026
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகனின் தைரியம் இது” என்று அந்த நபரைப் பாராட்டி வருகின்றனர். “யாராவது ஒருவர் இப்படித் தட்டிக் கேட்டால் தான் போக்குவரத்து விதிமீறல்கள் குறையும்” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெங்களூரு டிராபிக் போலீஸார் இதுபோன்ற விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த வீடியோவால் வலுத்துள்ளது.
