அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் (அமமுக) கடந்த சில நாட்களாக உட்கட்சிப் பூசல்கள் வெடித்து வருகின்றன. கட்சியிலிருந்து பல நிர்வாகிகள் தாமாகவே வெளியேறி வரும் நிலையில், அதிருப்தியில் உள்ள சிலரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக நீக்கி வருகிறார். அந்த வகையில், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த MD. முத்து இன்று கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரண்பாடான வகையில் செயல்பட்டதால், MD. முத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஒரு மாவட்டச் செயலாளர் நீக்கப்பட்டிருப்பது விழுப்புரம் மாவட்ட அமமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தினகரனின் இந்த கடும் நடவடிக்கை, கட்சிக் கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது