இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் வரும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கேஒய்சி என்ற வாடிக்கையாளரின் தரவுகளை கொண்ட ஆவணத்தை தவறாக பயன்படுத்தி குற்றங்கள் தற்போது அதிகரித்துள்ளது.

உங்கள் வங்கியில் இருந்து அழைப்பது போல் அழைத்து உங்களின் KYC விவரங்களை புதுப்பிக்கும்படி கேட்கின்றனர். அதற்கு உங்கள் வங்கியின் அசல் இணைய இணைப்பு மற்றும் லோகோவை ஒத்த போலி இணைப்புகள் உருவாக்கப்படுகிறது. எனவே மக்கள் இது போன்ற விவரங்களை யாராவது கேட்டால் பதில் அளிக்க வேண்டாம் எனவும் சம்பந்தப்பட்ட வங்கியை நேரில் சென்று அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.