ரயிலில் பயணம் செய்யும்போது ஜன்னல் ஓரம் அமர்வது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், ரயிலில் ஒரு விசித்திரமான “சீட்” உள்ளது, இதற்கு நீங்கள் முன்பதிவு செய்யத் தேவையில்லை, இதற்கென தனியாக டிக்கெட் எதுவும் வழங்கப்படுவதில்லை. அதுதான் ரயிலின் ‘இன்ஜின்’ பகுதிக்கு பின்னால் உள்ள லோகோ பைலட்டின் கேபின் அல்லது ரயிலின் கடைசி பெட்டியின் கதவு ஓரம்.
மேலும் அங்கிருந்து பார்க்கும்போது கிடைக்கும் தண்டவாளத்தின் விரிந்த காட்சி மற்றும் இயற்கையின் எழில் கொஞ்சும் காட்சிகள் வேறெந்த ஜன்னல் இருக்கையிலும் கிடைக்காது. குறிப்பாக மலைப்பாதைகளிலும், காடுகளின் வழியாகவும் ரயில் செல்லும்போது, இந்த இடத்திலிருந்து கிடைக்கும் ‘வியூ’ மிகவும் பிரமிக்கத்தக்கதாக இருக்கும்.
View this post on Instagram
“>
இந்த இருக்கை அல்லது இடம் தொழில்நுட்ப ரீதியாக பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டது அல்ல என்றாலும், ரயிலின் இருபுறமும் உள்ள இயற்கை அழகை முழுமையாக ரசிக்க இதுவே சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. ரயில்வே விதிகளின்படி கதவு ஓரம் நிற்பது ஆபத்தானது என்றாலும், பல பயணிகளும் புகைப்படக் கலைஞர்களும் அந்த அற்புதமான காட்சிக்காகவே அங்கு தவம் கிடக்கிறார்கள்.
இந்நிலையில் முன்பதிவு செய்த சொகுசு இருக்கைகளில் கூட கிடைக்காத அந்த ஒரு சுதந்திரமான உணர்வும், கண்முன்னே விரியும் நீண்ட தண்டவாளத்தின் அழகும் இந்த இடத்தைத் தனித்துவமான ஒன்றாக மாற்றுகிறது. இதனாலேயே இது “டிக்கெட் இல்லாத சொகுசு இருக்கை” என்று அழைக்கப்படுகிறது.
