கர்நாடக மாநிலம் சாமராஜநகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில், நள்ளிரவு நேரங்களில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி, அதனை அணிந்துகொண்டு ஆபாசச் செயல்களில் ஈடுபடும் மர்ம நபரால் பெண்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். அதாவது அந்த  பகுதியில் கடந்த சில நாட்களாக, வீடுகளுக்கு வெளியே காயப்போடப்பட்டிருக்கும் பெண்களின் துணிகள் மர்மமான முறையில் காணாமல் போய் வந்தன. ஆரம்பத்தில் இது சாதாரணத் திருட்டாக இருக்கலாம் என்று கருதிய குடியிருப்பாளர்கள், இந்தச் சம்பவம் தொடர்ச்சியாகவே அப்பகுதி மக்களிடையே சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து, உண்மை என்னவென்று கண்டறிய சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியிருந்த காட்சிகள் அவர்களை உறைய வைத்தன.

நள்ளிரவு நேரத்தில் பெண் வேடமிட்டு அந்தப் பகுதிக்குள் நுழையும் ஒரு நபர், வீடுகளின் முன் உலர வைக்கப்பட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகளைத் திருடுகிறார். அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், திருடிய அந்த ஆடைகளை அங்கேயே அணிந்துகொண்டு, கேமரா முன்பாகவே மிகுந்த வக்கிரமான முறையில் ஆபாசச் செயல்களில் ஈடுபடுகிறார். அந்த நபரின் நடவடிக்கைகள் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது கடுமையான பாலியல் வக்கிரம் கொண்டவராகவோ இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தால் ஹவுசிங் போர்டு காலனிப் பகுதியில் வசிக்கும் பெண்கள் மிகுந்த பாதுகாப்பற்ற உணர்வுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். “இது வெறும் துணித் திருட்டு மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்பிற்கு விடப்பட்ட சவால். இத்தகைய வக்கிர புத்தி கொண்ட நபர்களால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம்” என அப்பகுதி பெண்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் புகாரைத் தொடர்ந்து சாமராஜநகர் நகரப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர். விரைவில் அந்த நபர் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் உறுதி அளித்துள்ளனர்.