சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, “அம்மா எப்போதும் அம்மாதான்” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அதில் ஒரு குட்டிக் குரங்கு விளையாட்டாக கையில் கிடைத்த சோப்பு கட்டியை உணவு என்று நினைத்து கடிக்க முயல்கிறது. இதைக் கண்ட அதன் தாய் குரங்கு, பதற்றத்துடன் ஓடி வந்து மனிதர்களைப் போலவே சத்தமிட்டு அந்தக் குட்டியைக் கண்டிக்கிறது.
மேலும் தன் பிள்ளையின் ஆரோக்கியத்தில் காட்டும் அந்த அக்கறையும், குட்டி தவறு செய்யும் போது ஒரு தாய் காட்டும் கண்டிப்பும் பார்ப்பவர்களின் நெஞ்சைத் தொடும் வகையில் அமைந்துள்ளது. விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உணர்ச்சிகளில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை என்பதை இந்தத் தாய் குரங்கு உணர்த்துகிறது.
View this post on Instagram
“>
இந்நிலையில் சோப்பு உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்த அந்தத் தாய், தன் குட்டியை அதட்டி காப்பாற்றும் விதம் “அம்மா என்றால் அன்பு மட்டுமல்ல, அறிவார்ந்த பாதுகாப்பும் கூட” என்பதற்குச் சான்றாக இருக்கிறது. இந்த சுவாரஸ்யமான வீடியோ பலரையும் ரசிக்க வைப்பதுடன், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
