மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் இருந்து டானாபூர் வரை ரயில் பெட்டியின் அடியில் சக்கரத்தை பிடித்துக் கொண்டு ஒருவர் 290 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்த நிலையில் அந்த வாலிபர் டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் ரயில் பெட்டியின் அடியில் சக்கரத்தை பிடித்துக் கொண்டே பயணம் செய்தது தெரிய வந்தது.

இந்த விவகாரம் ரயில் ஓட்டுநருக்கு தெரிய வந்த நிலையில் ரயிலை நிறுத்தி அந்த வாலிபரை மீட்டனர். ஜபல்பூர் ரயில் நிலையம் அருகே அந்த வாலிபர் இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த வாலிபரை ரயிலை நிறுத்தி மீட்ட நிலையில் டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் அப்படி பயணம் செய்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.