தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025 ஆண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (Group 2 மற்றும் Group 2A) பணிகளுக்கான அறிவிப்பை இன்று (ஜூலை 15) வெளியிட்டுள்ளது. தேர்வாணையம் ஏற்கெனவே அறிவித்திருந்ததுபோல், 645 அரசு காலி பணியிடங்களை நிரப்பும் நோக்கில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம்:

விண்ணப்பம் தொடக்கம்: 15.07.2025

விண்ணப்பம் முடிவு: 13.08.2025

தேர்வு தேதி: 28.09.2025

தேர்வர்கள், www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தினை யுபிஐ (UPI) மூலமாக செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

645 காலிப்பணியிடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளதாவது தோராயமான எண்ணிக்கை மட்டுமே. அரசுத் துறைகள் மற்றும் நிறுவங்களிடம் இருந்து காலி பணியிடங்கள் இன்னும் அதிகரித்து கிடைக்கும் பட்சத்தில், கலந்தாய்வுக்கு முன் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என TNPSC தெரிவித்துள்ளது.

இந்த ஒருங்கிணைந்த தேர்வு மூலம், சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தேர்வர்கள் நலன் கருதி, Group 2A பணிகளுக்கான தேர்வுத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வு முறையில் வழக்கத்துக்கு மாறான, புதுமையான மாற்றங்கள் இடம்பெறும் என TNPSC தெரிவிக்கிறது.

2018 முதல் 2025 வரை 8 ஆண்டுகளாக வெளியான TNPSC அறிவிப்புகளில், 2024 மற்றும் 2025 ஆகிய வருடங்களில் தொடர் ஆண்டுகளில் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருப்பது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடலாம்.