அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக, ஒரு கலகலப்பான சம்பவம் அரங்கேறியது.
டாஸ் போடுவதற்கு முன்பு இரு அணிகளின் கேப்டன்களும் நேருக்கு நேர் சந்தித்தபோது, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, குஜராத் கேப்டன் ஷுப்மன் கில்லின் புதிய தோற்றத்தை கிண்டல் செய்தார்.
கழுத்து வலி காரணமாக ஒரு போட்டியில் விளையாடாத கில், தற்போது தாடியுடன் கூடிய புதிய கெட்டப்பில் மைதானத்திற்குத் திரும்பியிருந்தார். இதைக் கண்ட பாண்டியா, தனது தாடியைத் தடவிக்கொண்டே சிரித்தபடி கில்லின் புதிய தோற்றத்தை வேடிக்கையாகக் கேலி செய்தார்.
ஷுப்மன் கில்லின் இந்த புதிய தாடி லுக் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையவாசிகள் பலர் #GillBeard என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, அவர் தாடி வளர்ப்பதற்காகவே பிரேக் எடுத்தாரா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
Hardik Pandya teasing Shubman Gill for his beard. 😭❤️pic.twitter.com/EvjleQdsuX
— GillTheWill (@GillTheWill77) April 20, 2026
“>
அதே சமயம், அவரது ரசிகர்கள் இந்தத் தோற்றம் அவருக்கு ஒரு கம்பீரமான “கேப்டன் லுக்” தருவதாகவும், விராட் கோலியின் ஸ்டைலை நினைவூட்டுவதாகவும் பாராட்டி வருகின்றனர். மைதானத்தில் நடந்த இந்தச் சிறு கேலி கிண்டல்கள், போட்டியின் தீவிரத்திற்கு மத்தியிலும் ரசிகர்களை ரசிக்க வைத்தது.
