அதானி குடும்பத்தைச் சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதானி குடும்பத்தின் பிரதான நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 20% வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை தொடர்ந்து அதானி குடும்பத்தின் பங்குகள் கடும் சரிவை  நோக்கி வருகிறது. இந்நிலையில் அதானி உலக பணக்காரர் பட்டியலில் 15-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதில் பத்தாவது இடத்தில் இருந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனையடுத்து சொத்து மதிப்பின் சரிவு காரணமாக பணக்காரர் பட்டியலில் இருந்து ஒரே வாரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்து 15 -வது இடத்திற்கு அதானி தள்ளப்பட்டுள்ளார். மேலும் அதானி குழும பங்குகளின் சரிவால் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது.