மருத்துவமனையில் ஒரு மாணவர் செய்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை இல்லை. ஆனால் அறுவை சிகிச்சை ஊசி கொண்டு அறுந்து போன செருப்பை சரிசெய்த சம்பவம் தான் இது. முழு மருத்துவ சீருடையில், முகக்கவசம் மற்றும் ஹெட்கவர் அணிந்த நிலையில் ஒரு மருத்துவ மாணவர், நோயாளி படுக்கையின் பக்கத்தில் செருப்பை எடுத்துக்கொண்டு, அறுவை சிகிச்சைக்கான நூலால் தைத்துக்கொண்டிருந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில், மாணவர் ஒரு செருப்பை மேசையின் மீது வைத்துக்கொண்டு, அறுவை சிகிச்சை ஊசி மற்றும் தையல் நூலால் அதைப் பெரும் கவனத்துடன் தைத்து வருகிறார். பின்னணியில் நோயாளிகள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதும் தெளிவாக தெரிகிறது. இது ஒரு வினோதமான காட்சியாக இருந்தாலும், வீடியோவைப் பார்த்த பலர் அதை சிரிப்புடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். “டாக்டரிலிருந்து செருப்பு தைப்பவராய் மாறினார்!” என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். “இது அவருக்கான ஆப்ரேஷன்பயிற்சி!” என மற்றொருவர் நக்கலாக எழுதியுள்ளார்.
View this post on Instagram
ஆனால், சிலர் இந்த காட்சியினை சுகாதார கோணத்தில் கடுமையாக விமர்சித்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் footwear தைக்கும் போன்ற வேலையில் பயன்படுத்தப்படுவது தவறானது என்றும், அதே உபகரணங்கள் பின் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் அது ஆபத்தாக இருக்கலாம் என சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இந்த வீடியோ எங்கு, எந்த மருத்துவமனையில் எடுத்தது என்பது தற்போது வரை தெரியவில்லை. இருப்பினும், மருத்துவ வளங்களின் தவறான பயன்பாட்டை இது கேள்விக்குள் கொண்டு வந்துள்ளது.
