ஜெர்மனியின் பிரபல நிறுவனமான ஃப்ளிக்ஸ்பஸ் இந்தியாவுக்குள் நுழைவதாக அறிவித்துள்ளது. அதாவது நாட்டிலேயே முதன்முறையாக, புது தில்லி, ஹிமாச்சல், ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி. முழுவதும் முக்கிய நகரங்கள் மற்றும் வழித்தடங்களை இணைக்கும் சேவைகளை ஃப்ளிக்ஸ்பஸ் இயக்கவுள்ளது.

இந்த பேருந்துகள் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் தொடங்கும். துவக்க சலுகையின் கீழ், ஆரம்ப வழிகள் எங்கிருந்தும் எங்கும் ரூ. 99க்கு டிக்கெட் வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.