கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் இது தொடர்பாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மகளிர் காவல் நிலையத்தில் காணாமல் போன சிறுமி சரணடைந்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களும் உடனடியாக அங்கு வந்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது இறச்சகுளம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் சிறுமி பழகி வந்த நிலையில் அந்த வாலிபர் சிறுமியை திருநெல்வேலிக்கு கடத்தி  சென்றுள்ளார். அதன் பிறகு அவரை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்த நண்பர்கள் உதவியுடன் ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளார். அதன் பிறகு அந்த வாலிபர் அங்கு வரவில்லை. இதைத்தொடர்ந்து அங்கிருந்து தப்பிய சிறுமி ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் செல்போன் வாங்கி வாலிபருக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனாலும் அந்த வாலிபர் அங்கு வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிறுமி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுமியை கடத்திச் சென்ற வாலிபர்கள் உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.