கர்நாடக மாநிலம் ஷிவமொகா பகுதியில் அதிக பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் செல்போனை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு டாக்டர்கள் ஆபரேஷன் மூலம் வயிற்றிலிருந்து செல்போனை அகற்றினர்.
அதாவது கைதி ஒருவர் செல்போனை விழுங்கியதாக கூறிய நிலையில் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள் வயிற்றில் செல்போன் இருப்பதை உறுதி செய்த டாக்டர்கள் ஆபரேஷன் மூலமாக பின்னர் அந்த செல்போனை அகற்றினர்.
மேலும் சிறைச்சாலையில் கைதிக்கு செல்போன் கிடைத்தது எப்படி என தற்போது அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
