பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை தற்போதும் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது மிக முக்கிய அதிரடி விளக்கத்தை அளித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், தற்போதும்கூட ரூ.2,000 நோட்டு சட்டப்பூர்வமாக செல்லத்தக்க ஒன்றுதான் என்று ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு இன்னும் ரூ.2,000 நோட்டுகளை மாற்றாமல் வைத்திருக்கும் பொதுமக்களுக்குப் மத்தியில் ஒரு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று எவ்வித சிரமமும் இன்றி மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, நேரடியாக வர முடியாதவர்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை தபால் (Post) மூலமாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்தால், அந்த நோட்டுகளுக்கான சரியான மதிப்பு அவர்கள் குறிப்பிடும் வங்கி கணக்கில் (Bank Account) நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் ஆர்பிஐ அதிரடியாக விளக்கியுள்ளது.
