கரூர் மாவட்டம் நஞ்சை புகழூர் கிராமத்தில் காவிரியாற்றின் குறுக்கே ரூ.406.5 கோடி பிரம்மாண்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணைப் பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் இன்று நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த மெகா திட்டத்தின் மூலம் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, விவசாயப் பாசனமும் பெரும் பயனடையும் என்பதால், பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் களத்தில் இறங்கியுள்ளார்.

​இந்த ஆய்வின்போது, தடுப்பணையின் ஒட்டுமொத்த கட்டுமான முன்னேற்றம், மிக முக்கியக் கட்டமான ஷட்டர்கள் பொருத்தும் பணிகள் மற்றும் திட்டத்தின் தற்போதைய நிலைப்பாடு குறித்து அங்கிருந்த நீர்வளத்துறை உயர் அதிகாரிகளிடம் அமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், பணிகளை எவ்வித தொய்வுமின்றி, தரம் குறையாமல் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.