தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் கொல்லாப்பூர் நகரில் உள்ள அரசு முதுகலை (PG) கல்லூரி ஒன்றில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
மேலும் அங்குள்ள கல்லூரி முதல்வர், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும், அவரிடமிருந்து தப்பிக்கவும் அந்த மாணவி கல்லூரி முதல்வரைக் கடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி அளித்த புகாரின் பேரில், பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் கல்லூரி முதல்வர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
