தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் (29) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி ஜெயபால் (27) ஆகிய இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை காரில் அழைத்துச் சென்ற இவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதியில் (லாட்ஜ்) தங்க வைத்துள்ளனர்.
அங்கு வைத்து, அந்த இளம்பெண்ணுக்குத் தெரியாமல் அவர் குடித்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். பெண் மயங்கியதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த இளம்பெண், தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அந்த விடுதியில் இருந்து சாதுரியமாகத் தப்பி ஓடி வந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த பெண் போலீசார், தலைமறைவாக இருந்த த.வெ.க. நிர்வாகிகள் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணைச் சீரழித்த அரசியல் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் உள்ளது வெற்றி கழகத்தினர் குற்ற செயல்களில் ஈடுபடும் நிலையில், சொந்த கட்சியினரை அடக்க வக்கில்லாதவர் எப்படி காவல்துறையை நிர்வகிப்பார் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
