ஜி20 நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடந்து வருகிறது. பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். உலகத் தலைவர்கள் ஒரு பூமி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியா தலைமையிலான G20 மாநாட்டில் பங்கேற்றுள்ள விருந்தினர்களுக்காக அறுசுவை உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதற்காக உருவாக்கப்பட்ட பட்டியலில் உலகத் தலைவர்களின் பெயர்களில் சில உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பைடன் தந்தூரி மலாய் பிரக்கோலி, டிரம்ப் ஹால்ஃப் தந்தூரி சிக்கன், G20 அஜெண்டா மர்க் கஸ்தூரி கெபாப், போன்ற உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.