ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைப்பிற்குப் பிறகு, ஜியோ-ஹாட்ஸ்டார் (JioHotstar) சேவைகளுக்கான புதிய கட்டண மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விலையுயர்வு வருகிற 2026, ஜனவரி 28-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த சூப்பர் (Super) மற்றும் பிரீமியம் (Premium) திட்டங்களின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:
அதன்படி திட்டம் பழைய விலை (ரூ.) புதிய விலை (ரூ.) கால அளவு
சூப்பர் 299, 349, 3 மாதங்கள்
சூப்பர் 899, 1,099, 1 ஆண்டு
பிரீமியம் 499, 699, 3 மாதங்கள்
பிரீமியம் 1,499, 2,199 புதிய ரூ.79 திட்டம் அறிமுகம்
சாதாரண பயனர்களைக் கவரும் வகையில், முதன்முறையாக ரூ.79 மதிப்பிலான புதிய மலிவு விலைத் திட்டம் ஒன்றையும் ஜியோ-ஹாட்ஸ்டார் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறைந்த கட்டணத்தில் ஓடிடி (OTT) சேவையைப் பெற விரும்புவோருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
கட்டண உயர்விலிருந்து தப்பிக்கவும், பணத்தை மிச்சப்படுத்தவும் ஜியோ ஒரு சிறப்புத் திட்டத்தை வழங்குகிறது. இதில் ஜியோ-ஹாட்ஸ்டார் சந்தாவுடன், இலவச நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தாவும் வழங்கப்படுகிறது. ஒரே ரீசார்ஜில் இரண்டு முன்னணி ஓடிடி தளங்களை அணுக முடிவதால், தனித்தனியே சந்தா செலுத்துவதைத் தவிர்த்துப் பயனர்கள் கணிசமான தொகையைச் சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பயனர்கள் பழைய விலையிலேயே சந்தாவைப் புதுப்பிக்கவோ அல்லது தங்களுக்குப் பொருத்தமான புதிய திட்டத்தைத் தேர்வு செய்யவோ ஜனவரி 28-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது.
