பிரேசில் நாட்டில் உள்ள ஒலிண்டா நகரில் இருக்கும் ஓர் உடற்பயிற்சிக் கூடத்தில் (Gym) பயிற்சி செய்து கொண்டிருந்த ரொனால்ட் மாண்டினீக்ரோ (55) என்பவர், பார்பெல் அவரது மார்பின் மீது விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.55 வயதுடைய அந்த நபர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, திடீரென அவரது கைகளிலிருந்து பார்பெல் நழுவி மார்பின் மீது விழுந்த அதிர்ச்சி தரும் காட்சிகள் பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.
பார்பெல் விழுந்த பிறகு எழுந்து மார்பைத் தொட்ட அவர், சில கணங்களிலேயே தரையில் மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
☠️A Brazilian man lost control of a barbell and died right in the gym
He was using an unsafe grip — without wrapping his thumb around the bar. It slipped, crashed onto his chest, and the impact caused his heart to stop.
👍Gym lovers, watch your thumbs — it might literally save… pic.twitter.com/mSEiq5vdqj
— NEXTA (@nexta_tv) December 4, 2025
“>
இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ரொனால்ட், பிரேசிலின் புகழ்பெற்ற பலாசியோ டோஸ் போனெகோஸ் ஜிகாண்டஸ் அருங்காட்சியகத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு அருங்காட்சியகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
