இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய மூத்த வீரருமான ரோஹித் ஷர்மா மீதான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் ஆஃப்ரிதியின் விமர்சனம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடரின் ஆரம்ப போட்டியில் ரோஹித் ஷர்மா வெறும் 8 ரன்களில் அவுட்டானது குறித்து கருத்து தெரிவித்த அப்ரிதி, “ ஜிம்பாப்வே போன்ற அணிகளை எதிர்கொண்டால்தான் ரோஹித் சதம் அடிப்பார். ஆனால் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளை எதிர்கொண்டால் அவரால் பெருமை செய்துகொள்ள முடியாது” என விமர்சித்தார்.

அதோடு, “ரோஹித் ஷர்மா போன்ற வீரர்களை தற்போது உள்ள சூழ்நிலையில் அணியில் வைத்திருக்கவே வேண்டாம். அவரை ஓய்வு கொடுத்துவிட வேண்டும்” என கடுமையான விமர்சனத்தையும் அவர் கூறினார். மேலும், “ஒரு தொடர் அல்ல, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அவர் எந்த முக்கிய பங்களிப்பும் செய்யவில்லை” என்றும் கூறி, அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். இந்த கருத்துகள் தற்போது பாகிஸ்தானிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

இந்தக் கருத்துகள் இணையத்தில் பரவியதும், இந்திய ரசிகர்கள் கடும் எதிர்வினை தெரிவித்துள்ளனர். “முதலில் உங்கள் பாகிஸ்தான் அணியின் நிலையை சரி செய்யுங்கள், பிறகு ரோஹித்தைப் பற்றி பேசுங்கள்” என பலர் ஆஃப்ரிதிக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

“ரோஹித் ஷர்மா ஒரு மெச்சுரான பிளேயர். அவரது திறமை குறைவாகும் தருணம் இது அல்ல” எனும் வாதத்துடன் அவரது ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவை எதிர்த்து நடக்கும் தொடரில் ரோஹித் மீண்டும் தன்னை நிரூபிப்பாரா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது