பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை கேப்டனாக இருந்த முகமது ரிஸ்வானுக்கு பதிலாக பிசிபி இந்த முடிவை எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன், உயர் செயல்திறன் இயக்குனர் அகிப் ஜாவேத் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியில் சேர்ந்து விளையாடத் தொடங்கிய ஷாஹீன், இதுவரை 66 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 131 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான சாதனையைப் படைத்துள்ளார். 25 வயதான இவர், ஒரு வேகப்பந்து வீச்சாளராக மட்டும் இல்லாமல், அணியின் நம்பிக்கைக்குரிய தலைவராகவும் வளர்ந்துள்ளார்.

“>

 

கடந்த ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக இருந்த ஷாஹீன், தற்போதைய பருவத்தில் மீண்டும் பொறுப்பு ஏற்கிறார். நவம்பர் 4ஆம் தேதி தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகளுடன் அவர் தனது புதிய தலைமையினை தொடங்கவுள்ளார்.

“>

 

முகமது ரிஸ்வான், கடந்த அக்டோபரில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோல்வியும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் தோல்வியும் அவரின் பதவியை இழக்கச் செய்துள்ளது.

இதன் விளைவாகவே, தற்போது ஷாஹீன் அப்ரிடி புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம், பாகிஸ்தான் அணியின் எதிர்கால அணிநிர்வாகத்திலும், மேட்ச் ரிசல்ட்ஸிலும் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.