இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, அணிக்கு தேவையான தருணங்களில் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் தீபாவளி விழாவை கொண்டாடி புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். ஆனால் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, சில நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை எழுப்பினர். குறிப்பாக, அவரது தாத்தா சன்தோக் சிங் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. “உங்கள் தாத்தாவை உங்கள் அம்மா வீட்டில் இருந்து விரட்டிவிட்டார்” எனக் கூறி, அந்த சம்பவத்தை சமூக வலைதளங்களில் மீட்டெடுத்து விமர்சிக்கின்றனர்.

2017ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி, பும்ராவின் பிறந்த நாளன்று அவரது தாத்தா சன்தோக் சிங், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து அகமதாபாத் வரையிலான நீண்ட பயணத்தை மேற்கொண்டு, பும்ராவை சந்திக்க வந்திருந்தார். ஆனால் அவரது தாய் தல்ஜித் கௌர் அவரை வீட்டிற்குள் அனுமதிக்காமல், பும்ரா இல்லையெனக் கூறி திருப்பி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.

“>

 

இந்த நடவடிக்கையால் மனமுடைந்த சன்தோக் சிங், தனது மகனுக்கு அழைத்து, “நான் உங்கள் அம்மாவிடம் போகிறேன்” என கூறி, பின்னர் சபர்மதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இது 2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாகும். தற்போது தீபாவளி கொண்டாட்டத்தின் போது பும்ரா தனது தாயுடன் இணைந்த புகைப்படங்கள் வைரலாக, அந்த வரலாற்றுச் சம்பவத்தை மீண்டும் நெட்டிசன்கள் பகிர்ந்து, அவரை கடுமையாக விமர்சிக்கின்றனர். கடந்த சம்பவத்தின் மீதான உணர்வுப் பாதிப்பு இன்னும் பலரிடமும் நீங்கவில்லை என்பதையும் இந்த நிகழ்வு வெளிக்கொணர்கிறது