நடிகர் ரவி மோகன் மற்றும் கார்த்திக் சுப்புராஜைத் தொடர்ந்து, தற்போது நடிகர் சிலம்பரசனும் (STR) தனது ‘விஜய் அண்ணாவிற்காக’ உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருப்பதைக் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அண்ணா, பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை. இதைவிட பெரிய புயல்களை எல்லாம் நீங்கள் கடந்துவிட்டீர்கள். இதுவும் கடந்து போகும்” என நம்பிக்கையூட்டியுள்ளார்.
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
— Silambarasan TR (@SilambarasanTR_) January 8, 2026
மேலும், “உண்மையான திருவிழா ‘ஜன நாயகன்’ வெளியாகும் நாளில்தான் தொடங்கும்” என சிம்பு குறிப்பிட்டுள்ளது, சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. திரைத்துறையில் விஜய்க்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகப் பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், சிம்புவின் இந்த ‘மாஸ்’ ஆதரவு கோலிவுட்டில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
