தெலங்கானா மாநிலம் ஜீடிமெட்லாவில் உள்ள ஒரு பள்ளியில், மழலையர் பள்ளிச் சிறுமி வகுப்பறையில் சிறுநீர் கழித்ததால், ஆத்திரமடைந்த 55 வயது ஆயா ஒருவர் அக்குழந்தையை மிகக் கொடூரமாகத் தாக்கினார். சிறுமியின் தலையைத் தரையில் மோதியும், மிதித்தும் தாக்கும் இந்தச் செயல் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் காணொளியைப் பார்த்த குழந்தையின் பெற்றோர், பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், போலீசில் புகார் அளித்தனர்.

வீடியோவை காண

தாக்குதலுக்குள்ளான சிறுமிக்கு உள் காயம் ஏற்பட்டுள்ளது. ஆயாவுக்கும், அதே பள்ளியில் பணிபுரியும் சிறுமியின் தாய்க்கும் இடையே இருந்த தனிப்பட்ட பிரச்சினையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. ஆயா மற்றும் பள்ளி நிர்வாகம் மீது குழந்தை நீதிச் சட்டம் உட்படப் பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆயா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.