ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வாட்சன், தனது ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பெயர் போனவர் என்றாலும், களத்திற்கு வெளியே அவர் எவ்வளவு பெரிய மனிதநேயம் கொண்டவர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த சாட்சியாக அமைந்துள்ளது. சமீபத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வாட்சனிடம், சிறுவன் ஒருவன் ஆவலுடன்ஆட்டோகிராப் கேட்டுள்ளான்.
அப்போது பயிற்சியில் பிஸியாக இருந்த வாட்சன், “பயிற்சி முடிந்ததும் கண்டிப்பாக தருகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார். பொதுவாகப் பெரிய நட்சத்திரங்கள் இது போன்ற வாக்குறுதிகளை மறந்துவிடுவது வழக்கம், ஆனால் வாட்சன் பயிற்சி முடிந்ததும் தேடி வந்து அந்தச் சிறுவனுக்கு ஆட்டோகிராப் கொடுத்து நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.
<a href=”http://
An Indian kid asked Shane Watson for an autograph. He said he’d give it after practice. After finishing practice, he came back, kept his word and gave that little Indian fan an autograph.
A man with a golden heart ❤️ pic.twitter.com/cbffuPpxxQ
— Suprvirat (@Mostlykohli) April 17, 2026
“>
சொன்ன சொல்லைக் காப்பாற்றிய வாட்சனின் இந்த எளிமையான குணம், தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
