தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் திரைத்துறையினர் ஆடம்பரத்தைத் தவிர்க்க வேண்டும் என்று ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக, தற்போதைய சூழலில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, தேவையில்லாத செலவுகளைக் குறைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தான் சொன்னதைச் செயலில் காட்டும் விதமாக, தற்போது தனது படப்பிடிப்பு தளத்திற்குச் செல்ல தனி விமானத்தைத் (Private Jet) தவிர்த்துவிட்டு, சாதாரண பொதுமக்களுடன் இணைந்து எகானமி கிளாசில் பயணம் செய்துள்ளார்.
விமானத்தில் ஒரு சாதாரண பயணியைப் போல அமர்ந்து கமல் செல்போனைப் பார்த்தபடி இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
உலகநாயகன் அந்தஸ்தில் இருக்கும் ஒரு நடிகர், எந்தவித பந்தாவும் இல்லாமல் இப்படி எளிமையாகப் பயணம் செய்வது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
“சொன்னதைச் செய்துகாட்டும் உண்மையான முன்னுதாரணம்” என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமலை பாராட்டித் தள்ளி வருகின்றனர். ஆடம்பரத்தைக் குறைத்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அவரது இந்த அதிரடி முடிவு மற்ற திரைத்துறையினருக்கும் ஒரு நல்ல பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
