அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சாட்டையால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக கூறியிருந்தார். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். இன்றிலிருந்து இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். பிப்ரவரி மாதம் ஆறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன்.
அந்த வகையில் அண்ணாமலை இன்று காளை தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டார். இது தொடர்பான புகைப்படம் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
