அமெரிக்க நாட்டில் செடார்பிளப் என்ற இடத்தில் 24 வயது வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தன்னுடைய சகோதரர், தந்தை மற்றும் மாமா ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு விட்டு பின்னர் ஒரு காரை திருடிக் கொண்டு தப்பி வீட்டை விட்டு ஓடினார். தன் குடும்பத்தினரை கொலை செய்த பிறகு அந்த பகுதியை சேர்ந்த ஒரு 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். துப்பாக்கி முனையில் அவர் பலாத்காரம் செய்ய முயன்ற நிலையில் திடீரென அந்த குழந்தையை சுட்டுக்கொன்று விட்டு ஓடிவிட்டார்.
அதுமட்டுமின்றி அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 7 வயது சிறுமியையும் கொலை செய்ய முயன்றுள்ளார். அதன் பிறகு அதே பகுதியில் எதிரில் வந்த இரண்டு சகோதரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதில் ஒருவர் உள்ளூர் பாதிரியார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட வாலிபரை அதிகாலை 3 மணி அளவில் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
