பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா எடுத்த அதிரடி முடிவால் இப்போது பாகிஸ்தான் நாடே சொட்டுத் தண்ணீருக்கு வழியின்றித் தவித்து வருகிறது.

60 ஆண்டுகால சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் (IWT) இருந்து இந்தியா விலகியதைத் தொடர்ந்து, அந்த நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி “தயவுசெய்து தண்ணீரைத் திறந்துவிடுங்கள்” என பகிரங்கமாகக் கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

பஹல்காமில் அப்பாவிச் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, “தண்ணீரும் ரத்தமும் ஒரே பாதையில் பாயாது” என முழங்கிய இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்லும் நீர் ஆதாரங்களை ஆயுதமாக்கியுள்ளது.

“இந்தியாவின் இந்த முடிவு எங்கள் பொருளாதாரப் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது; லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது” என ஆசிப் அலி சர்தாரி வேதனை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பல பகுதிகளில் பெண்கள் குடிக்கத் தண்ணீர் எடுக்கவே பல மைல் தூரம் நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டதால் அந்த நாடு நிலைகுலைந்து போயுள்ளது.

“பயங்கரவாதத்தை ஒழிக்கும் வரை பேச்சுக்கே இடமில்லை; தீவிரவாதத்திற்குத் துணை போனால் தாகத்தில்தான் தவிக்க வேண்டும்” என இந்தியா தனது பிடியில் உறுதியாக உள்ளது.

இந்தியா வீசிய இந்த ‘நீர்’ அம்பால் பாகிஸ்தான் என்ன செய்வதென்று தெரியாமல் உலக நாடுகளின் உதவியை நாடி வருகிறது.