உத்தரபிரதேச மாநிலம் ராய்பரேலி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை நடந்த ஒரு கோர விபத்து, அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சி மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் போது, வேலைக்கு சைக்கிளில் சென்ற மூன்று தொழிலாளர்கள் மீது வேகமாக வந்த ஸ்கார்பியோ வாகனம் மோதியதில், அவர்கள் மூவரும் பலத்த காயங்களுடன் சாலை ஓரமாக சிக்கிக் கிடந்தனர். இந்த நிகழ்வு அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்து நடந்ததும் வாகன ஓட்டுநர் எந்தவிதமான உதவியும் செய்யாமல் தப்பியோடினார். அருகிலிருந்த பொதுமக்கள் குரல் கேட்டு ஓடி வந்து காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மூவரின் நிலையும் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
उत्तर प्रदेश के रायबरेली में तेज़ रफ्तार स्कॉर्पियो ने साइकिल सवार मजदूर को कुचल दिया, जिससे वह गंभीर रूप से घायल हो गया और उसकी हालत नाजुक बनी हुई है। मजदूर रोज़ की तरह साइकिल से मजदूरी पर जा रहा था तभी यह हादसा हो गया। घटना का रोंगटे खड़े कर देने वाला लाइव वीडियो सामने आने के… pic.twitter.com/apzj2tBV8L
— ABP News (@ABPNews) August 31, 2025
“>
சிசிடிவி காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, போலீசார் வாகன ஓட்டுனரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் வாகன ஓட்டுநரை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
