நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த 60 ஆண்டுகால திராவிடக் கட்சி ஜாம்பவான்களான திமுக மற்றும் அதிமுகவை ஓரங்கட்டி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வரலாற்றுச் சிறப்புமிக்க மெகா வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில், “செல்போன்களால் இரண்டு நாடுகள் மட்டுமல்ல.. ஒரு மாநிலமே போய்விட்டது” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியிருப்பது தற்பொழுது தமிழக அரசியல் அரங்கிலும் சோசியல் மீடியாவிலும் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக-வின் இந்த இமாலய வெற்றிக்கு இளம் தலைமுறையினரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸுமே முக்கியக் காரணம் என்று திமுகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவத்தில் நூற்றுக்கணக்கான குடும்ப நல வழக்குகளைப் பார்த்திருப்பதாகவும், அதில் கணவன்-மனைவி பிரிவதற்கும் பிரேக்-அப் ஆவதற்கும் முக்கியக் காரணமே மொபைல் போன்தான் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தனக்கு முன்பு பேசியவர் செல்போனால் இரண்டு தேசங்கள் போய்விட்டது என்று குறிப்பிட்டதை ஒப்பிட்டு, செல்போனால் தற்பொழுது ஒரு மாநிலமே போய்விட்டது என்று அவர் நெகிழ்ச்சியுடன் பேசிய வார்த்தைகள், தவெக-வின் டிஜிட்டல் வெற்றியைத்தான் அவர் மறைமுகமாகக் குத்திக் காட்டுகிறார் என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை சோசியல் மீடியா ஏரியாக்களில் பதிவிட்டு வருவதால் இந்த விவகாரம் தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி செம ட்ரெண்டாகி வருகிறது.