பிரபல நடிகை பூனம் பாண்டேவிடம் செல்ஃபி எடுப்பது போல நடித்து, ஒரு நபர் அவருக்கு முத்தம் கொடுக்க முயன்ற அதிர்ச்சியூட்டும் காணொளி எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொது இடத்தில் ரசிகர்களுடன் நடிகை பழகிக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் மிக நெருக்கமாக வந்து அநாகரிகமாக நடந்துகொண்ட விதம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. செல்ஃபி எடுப்பதாகச் சொல்லிவிட்டு அத்துமீறிய அந்த நபரின் செயலால் அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பானது.

​இந்தக் காணொளியைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த நபருக்கு எதிராகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். “இது செல்ஃபி எடுப்பதல்ல, அப்பட்டமான துன்புறுத்தல் (Harassment)” என்று பலரும் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் மதிக்காத இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவை என்றும், அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.