உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (Google)-ன் தாய் நிறுவனமான ஆல்பபெட் (Alphabet)-ன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அதே வேளையில், அதன் நம்பகத்தன்மை குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் அவர் அளித்த பேட்டியில், “ஏ.ஐ. என்னும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் தாக்கமும் அபாரமாக உள்ளது. இருப்பினும் அதில் தவறுகளுக்கு இடம் உண்டு. ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என்று கூற முடியாது. வணிகம் மற்றும் பொருளாதார ரீதியாக அவை தரும் தகவல்களில் கூட பிழைகள் இருக்கலாம். எனவே, ஏ.ஐ. தரும் தகவல்களைப் பயனர்கள் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது; பிற நம்பகமான கருவிகளுடன் இணைத்தே பயன்படுத்த வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

மேலும், அதிநவீன ஏ.ஐ. மாதிரிகளில் பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சுந்தர் பிச்சை சுட்டிக்காட்டியுள்ளார்.