ஜப்பானின் ஒசாகா நகரில் கடந்த நவம்பர் 14 அன்று ஒரு நாடகத்தனம் நிறைந்த மீட்பு நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.

இங்குள்ள இரண்டாவது மாடி குடியிருப்பில் அடுப்பில் முட்டை அவித்துக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாம். தீ தீவிரமடைந்ததைக் கண்ட 26 வயதான அப்பெண், பால்கனிக்கு வந்து உதவிக்காகக் காத்திருந்தார்.

புகைமூட்டத்தால் பீதியடைந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் ஏணியை அமைத்து அவளை மீட்க முயன்றனர். அப்போது, ஒரு மீட்புப் பணியாளர் ஏணியில் ஏறி அவளை நெருங்கியபோது, அதிக பயம் மற்றும் பதற்றம் காரணமாக, அந்தப் பெண் எதிர்பாராத விதமாகக் காலால் உதைத்து மீட்புப் பணியாளரை ஏணியில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.

“>

 

அடுத்த சில நொடிகளிலேயே அவரும் நிலை தடுமாறிப் பால்கனியில் இருந்து கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக, கீழே விழுந்த அந்தப் பெண்ணும், தீயணைப்பு வீரரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகிப் பரவி வரும் நிலையில், தீயணைப்பு வீரர்கள் 20 நிமிடங்களில் தீயை அணைத்து, அது பரவாமல் தடுத்துள்ளனர்.