தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, வெகுவாக அரசியல் பிம்பத்தை உருவாக்கி வருகிறார்.
விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் நடைபெற்ற மாநில மாநாடுகளில் பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை நேரடியாக விமர்சித்த அவர், தற்போது “உங்கள் விஜய் – நான் வரேன்” என்ற முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் தமிழக அரசியல்வாதிகளுள் அதிக பின்தொடர்பவர்களை கொண்டவர் விஜய் என கணக்கெடுப்பு கூறுகிறது.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் ஆகிய மூன்றிலும் Vijay-ஐ மொத்தமாக சராசரியாக 93 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
அவரைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் (30 லட்சம்), அண்ணாமலை (10.25 லட்சம்), உதயநிதி ஸ்டாலின் (16.25 லட்சம்), எடப்பாடி பழனிசாமி (2.95 லட்சம்) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
எனினும், விஜய் ஒரு சினிமா பிரபலம் என்பதாலும், உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதாலும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை நேரடி ஓட்டுகளாகக் கருத முடியாது என சமூக வலைத்தள நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
